மூன்று முறை தோல்வியடைந்தவர்கள் தவத்தை தோற்கடிப்பார்கலாம் -
பொதுத் தேர்தலில் மூன்று முறை தோல்வியடைந்த சேகு இஸ்ஸதீன்,அதாஉல்லா,ஹஸனலி,பஷீர் ஆகியோர் இணைந்து மூன்று முறை தேர்தல் கேட்டு மூன்று முறையும் வெற்றி பெற்ற மாகாண சபை உறுப்பினர் தவத்தை தோற்கடிப்பார்கலாம் என இவர்கள் கூறுவது ரோசமத்தவன் ராசாவிலும் பெரியவன் என்பது போல் உள்ளது என இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜெபீர் மௌலவி தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் அவர்களின் கவிதை நுால் வெளியீட்டுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை பிரதம அதிதியாக வர வேண்டுமென்று சேகு இஸ்ஸதீன் அழைப்பு விடுத்த போதும் எமது தலைவரின் தலைமையில் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு அதே தினத்தில் இடம் பெற்றதால் சேகுவின் அழைப்பை தலைவர் நிராகரித்தார்.இதன் காரணமாகவே கட்சியினால் துாக்கியெறியப்பட்டவர்களை அழைத்து நுால் வெளியீட்டை நடாத்தினார்.
சேகு இஸ்ஸதீன் எப்போதும் ஒரு அரசியல் கோமாளியாகவே இருந்து வருவது வழமை அதைத்தான் நேற்றிரவும் மக்களால் மூன்று முறை தோற்கடிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து மாகாண சபை உறுப்பினர் தவத்தை தோற்கடிப்பேன் என்கிறார்.
தோல்வி என்பது அதாஉல்லாவிற்கும் சேகுவிற்கும்,பஷீருக்கும்,ஹஸனலிக்கும் பழகிப் போனதை வைத்து மற்றவர்களும் தோற்று விட வேண்டுமென்று கனவு கான்கின்றார்.
மாகாண சபை உறுப்பினர் தவம் எமது கட்சிக்கு கிடைத்த ஆளுமை.அக்கரைப்பற்றை பிறப்பிடமாகக் கொண்டாலும் எமது சமூகத்தின் அடையாளம்.தேர்தலில் வாக்களிப்பது அக்கரைப்பற்று மாத்திரமல்ல என்பதோடு அம்பாரை மாவட்ட மக்கள் அனைவருமே தவத்திற்கு வாக்குப் போட தேர்தலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தவம் அவர்கள்தான் உங்கள் பிரச்சினை என்று எங்களுக்கு தெரியும் தவத்தை வீழ்த்துவதால் அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸின் நாமத்தை அழித்து விடலாம் என்ற உங்கள் திட்டம் நிறைவேறப் போவதில்லை.எமது கட்சிப் போராளிகள் உங்களைப் போன்று விபச்சார அரசியல்வாதிகள் அல்ல என்பதை இன்னுமா நீங்கள் புரிந்து கொள்ளவில்லை.அதிகாரம் பறி போனதால் நீங்கள் வெறிபிடித்து அலைகிறீர்கள். உங்கள் வெறியை முறிப்பதற்கு போராளிகளான எங்களிடம் முறி ஊசி இருக்கின்றது என்பதை ஞாபகப்படுத்துகிறோம்.
நீங்கள் மரணிக்கும் வரைக்கும் இனி எந்த பதவியையும் மக்கள் உங்களுக்கு வழங்க மாட்டார்கள்,அதை இறைவனும் பொருந்திக் கொள்வான் என்றார் முன்னாள் தவிசாளர்