News Update :

Saturday, July 29, 2017

TamilLetter

கொக்கேன் சம்பவத்துக்கும் ச.தொ.சவுக்கும் சம்பந்தமில்லை : சபையில் ரிஷாட் தெரிவிப்பு



கொக்கேன் சம்பவத்திற்கும் ச.தொ.ச நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
ச.தொ.ச.வை. நான் பொறுப்பேற்ற பின்னர் இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் இறக்குமதி செய்யவில்லை. தனியார் வழங்குனர் மூலமே இந்தப் பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றது.
அண்மையில் சீனிக்கொள்கலனில் கொக்கேன் இருந்ததை கண்டுபிடித்த ச.தொ.ச ஊழியர்களே பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இப்போது அந்தவிடயம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
இந்த விசாரணை முடிவு பெறும் வரை இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து ச.தொ.ச நிறுவனம் எந்தப்பொருட்களையும் கொள்வனவு செய்வதை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-