News Update :

Thursday, July 6, 2017

TamilLetter

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு ஆபத்து

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு ஆபத்து
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி அணித்தலைவர் பதவி பறிபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு பயிற்றுவிப்பாளராக இருந்த அனில் கும்ப்ளே, கோஹ்லியிடம் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகினார்.
அனில் கும்ப்ளே இந்திய அணிக்கு பயற்றுவிப்பாளராக இருந்த போது இந்திய அணி பல முக்கியமான போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது.
இந்நிலையில் அனில் கும்ப்ளே பதவி விலகியதும், இந்திய அணி மே. தீவுகளுக்கிடையிலான போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதனால் பி.சி.சி.ஐ.யின் கவனம் கோஹ்லி பக்கம் திரும்பியுள்ளது.
அடுத்துவரும் போட்டிகளில் இந்திய அணி நிலை எவ்வாறிருக்கப் போகின்றது என்பதைத் தொடர்ந்தே கோஹ்லியின் பதவி தப்புமா? இல்லையா என்பதை இந்திய கிரிக்கெட் சபை தீர்மானிக்கும்.
இதேவேளை விராட் கோஹ்லிக்கு தலைவர் பதவி பறிபோகும் பட்சத்தில் ரோஹித் சர்மா அல்லது அஜின்கே ரஹானே ஆகிய இருவரில் ஒருவருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு தலைவராக இருக்கும் சர்மா 3 தடவைகள் கிண்ணத்தை அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார். நேரத்திற்கேற்ப சிறப்பாக ஆடக்கூடிய சர்மா தோல்வியடையக்கூடிய போட்டியையும் வெற்றிக்கு கொண்டுவரும் திறமை வாய்ந்தவர் என்பதை இம்முறை நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் எம்மால் பார்க்க முடிந்தது.
அதேபோன்று ரஹானேவும் இந்திய அணியின் சில போட்டிகளுக்கு தலைவராக செயற்பட்டுள்ளார். ஆனால் அவரது குறைந்த ஸ்ரைக் ரேட்தான் கொஞ்சம் சிக்கலாக இருக்கின்றது. எனினும் அவர் தனது ஸ்ரைக் ரேட்டை அதிகரிக்கும் பட்சத்தில் ரஹானே அணித்தலைவராகும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இதனால் பி.சி.சி.ஐ. விராட் கோஹ்லியை கழுகு போல் கவனித்து வருகின்றது. அவரின் செயற்பாடுகள் எப்படியென்பதை தொடர்ந்தே அவர் தலைவரா? அல்லது சாதாரண வீரரா எனன்பதை தீர்மானிக்கும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-