News Update :

Wednesday, July 26, 2017

TamilLetter

வட்டமடு விவசாயிகளுக்கு எதிரான செய்தி - முன்னாள் அமைச்சர் அதாஉல்லா வெற்றிக் கொண்டாட்டம்


ஏ.எல்.தவம் - மாகாண சபை உறுப்பினர்

அக்கரைப்பற்று அழியட்டும் என அதாவுல்லாவும் ஆதாரவாளர்களும் விரும்புகிறார்கள்........

அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதான அபிவிருத்தியைத் தடுத்தீர்கள்.

அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட அம்பாரை மாவட்ட சமூக சேவைக் காரியாலய கட்டிடத்தை நிறுத்தினீர்கள்.

அக்கரைப்பற்று பத்ர் விளையாட்டு மைதானஅபிவிருத்தியைத் தடுத்தீர்கள்.
நிருவாகத்தில் திறமையற்றதும் ஊழல் நிறைந்ததுமான நிறுவனங்களை சீர்செய்யும் நடவடிக்கைகளைத் தடுத்தீர்கள்.

அரச நிலங்களை அபகரிக்கும் உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றினீர்கள்.
இரண்டு தொகுதிக்குள் பிரிந்து கிடக்கும் அக்கரைப்பற்றை ஒரு தொகுதிக்குள் கொண்டுவருவதை தடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

இவை போதாது என்றா இன்னும் வட்டமடு பிரதேச விவசாயக் காணிகளையும் பறிகொடுக்க நினைக்கிறீர்கள்?

உங்களிடம் அதிகாரம் இல்லாமல் போனதற்காக அக்கரைப்பற்றை ஏன் அழிக்க நினைக்கிறீர்கள்?
உங்களால் முடியாதவற்றை அடுத்தவர் செய்தால் ஏன் வயிறு எரிகிறீர்கள்.

நியாய தர்மம் மீறிய ஆனானப்பட்ட அரசர்களே அட்ரஸ் இல்லாமல் போன வரலாறுகளையும், அவர்களை அல்லாஹ் தண்டித்ததையையும் "குர்ஆன்" "ஹதீஸ்" களிலாவது நீங்கள் அறிந்தில்லையா?

"அல்லாஹ்வின் பிடி" பற்றி அவன் எச்சரிக்கை செய்துள்ளதில் அறவே உங்களுக்கு அச்சம் வரவில்லையா?

வட்டமடு ஏழை விவசாயிகளின் வயிறு எரிந்தால் உங்கள் சந்ததியின் கடைசித் தலைமுறை வரை அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர மாட்டீர்களா?

சக்தி ரீவியின் செய்தி கண்டு கொண்டாட்டம் ஆடுகிறீர்கள் கடந்த காலத்தில் உங்களைப் பற்றி அவர்கள் ஒளிபரப்பிய கருத்துக்களுக்கு எதிராக நீங்கள் போர்க்கொடி தூக்கிய காலத்தை எண்ணிப் பாருங்கள்? நினைவுறுத்த வேண்டுமாயின் ஒவ்வொன்றாய் பதிவிட்டு காட்டலாம்.

அரசியலுக்காக சொந்த மக்களையே பலிகொடுக்க நினைக்கும் உங்களிடமிருந்து ஏன் அல்லாஹ் அதிகாரத்தைப் பறித்தான் என்பதற்கு உங்களின் இந்த மனநிலைதான் காரணம் என்பதை நீங்கள் எப்போது உணருவீர்கள்.

அல்லாஹ் அநியாயக்காரர்களைத் தண்டித்தே ஆவான். அவனை அஞ்சிக்கொள்ளுங்கள். வட்டமடு விவகாரத்தையும் அரசியல் ஆக்கி அந்த மக்களின் பிரார்த்தனைகளால் அழிந்து விடாதீர்கள்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-