நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்து நிறைவேற்று பிரதமர் முறைமை ஒன்றுக்கு செல்ல வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளன.
பிரதி பிரதமர் பதவியொன்றை உருவாக்குவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரை செய்துள்ளது.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட முன்னதாக நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த யோசனைத் திட்டம் தொடர்பில் ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கவனம் செலுத்தி வருகின்றார்.
Sunday, July 2, 2017
இலங்கையில் நிறைவேற்று அதிகார பிரதமர் முறை அறிமுகம்?

About TamilLetter -
முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-