News Update :

Saturday, July 8, 2017

TamilLetter

பிரதியமைச்சர் பைஸல் காசீமுக்கு திருக்கோவில் மக்கள் நன்றி

பிரதியமைச்சர் பைஸல் காசீமுக்கு திருக்கோவில் மக்கள் நன்றி
பீ.நிர்மலன்
 மத்திய சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் சுற்றறிக்கை இல-01-01/2017இன் பிரகாரம் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட திருக்கோவில் வைத்தியசாலையை  மக்களிடம்   கையளிக்கும் நிகழ்வும், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வும்  (08) வைத்திய அத்தியட்சகர் மோகனகாந்தன் தலைமையில்    நேறறு திருக்கோவிலில் இடம் பெற்றது  இடம்பெற்றது.
 இம்முறை இலங்கையில் இவ்வைத்தியசாலையும் எஹெலியகொட வைத்தியசாலையுமே தரமுயர்த்தப்பட்டது.  ஆகவே இதனை தரமுயர்த்தம் செய்ததற்காக உதவியோருக்கு அம்மக்களால் நன்றிகளாக கெளரவமும் வழங்கி வைக்கப்பட்டது.
  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  அவசர சிகிச்சைப்பிரிவு திறந்து வைக்கப்பட்டதுடன், புதிதாக அமைக்கப்படவுள்ள சத்திர சிகிச்சைக்கூடம் மற்றும் இரத்த வங்கி கட்டிடத்திற்கான அடிக்கலும் நடப்பட்டதுடன் வைத்தியசாலைக்கு தேவையான கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரதியமைச்சர் பைஸல் காசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்
மேலும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன்,மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் உட்பட மாகாண சபை உறுப்பினர்களும்  பொதுமக்கள் என பலரும் கல்ந்துகொண்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-