News Update :

Sunday, July 30, 2017

TamilLetter

கிழக்கில் தேர்தல் மோசடி - அதிர்ச்சி தரும் தகவல்

கிழக்கில் தேர்தல் மோசடி -  அதிர்ச்சி தரும் தகவல்

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் மோசடிகள் பல இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியின் அனுமதி இல்லாமல் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முடியாது.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடந்த காலங்களில் தேர்தல் மோசடிகள் இடபெற்றுள்ளது என எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளதால் அதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களே முழுக்க முழுக்க காரணமானவர்.
கடந்த  2013  ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல் நிறைவடைந்து வாக்கு எண்ணும் நிலையத்தில் குறித்த மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்தபோது பின்வரும் விடயங்கள் தெரியவந்துள்ளது.  
கடந்த 2013 ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் தமிழ்மக்கள் சார்பாக தெரிவாகிய உறுப்பினர்களின்  எண்ணிக்கையை 3 இனால் குறைப்பதற்கு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக இருந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
 தமிழ்மக்கள் வழங்கிய வாக்கை மகிந்தவின் சிந்தனைக்கேற்ப மாற்றியமைத்து பாரிய ஜனநாயக தேர்தல்  மோசடியில்  மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ். சாள்ஸ் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அம்பாறை மற்றும் திரிகோணமலை மாவட்ட தேர்தல் பெறுபேறுகள் வெளியாகியிருந்த  நிலையில்
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள் மட்டும்  வெளிவர தாமதப்படுத்தப்பட்டு   தமிழரசு கட்சி சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் அதிக வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ் அவர்கள் அவசரமாக வருகைதந்து நிலமைகளை அவதானித போது தங்களது வெற்றி வாய்ப்பு  கைநழுவியுள்ளதை அறிந்து கொண்டு  அவர் அரச அதிபரை அவசரமாக  தொடர்புகொண்டு தேர்தல் முடிவுகளை மாற்றுமாறு கூறியுள்ளார்.
உடனடியாக  அரசாங்க அதிபர் திரு.நெடுஞ்செழியன் திட்டமிடல் பணிப்பாளர்
திரு.நேசராசா கணக்காளர்
திருமதி.ஜெகநாதன்
திருமதி.இந்திரா
ஆகியோருடன் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள்
ஆகியோரினைப் பயன்படுத்தி
மோசடியான முறையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக காட்டி   மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்தார்.
 இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெறவேண்டிய  2 ஆசனங்களை தமிழ் மக்கள் இழக்க நேர்ந்ததுடன் மாகாணத்தில் ஒரு மேலதிக ஆசனத்துடன் மொத்தமாக 3 ஆசனத்தை தமிழர்கள் இழந்துள்ளனர்.
  அரசாங்கம் அதிபரின் ஊடாக
மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் குறித்து  சில இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிந்திருந்தும் அவர்கள் எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுக்காமல்  பசில் ராஜபக்ஷ் அவர்களின் அன்பளிப்பு பெட்டியை  பெற்றுக்கொண்டு தேர்தல் முடிவுகளை அறிவிக்க முன்னர் மண்டபத்திலிருந்து வெளியேறினார்கள்.
ஆனால் மக்களின் ஜனநாயக உரிமைகள் மிக  மோசமாக மீறப்பட்டதாக மறுநாள் தினக்குரல் பத்திரிகையில் ஜனநாயக படுகொலை என தலைப்பிட்டு செய்தியாக வெளிவந்திருந்தது .
இதேபோல் 2015 ஜனாதிபதி தேர்தலிலும் மாவட்ட செயலாளர் அவர்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களை தோல்வியடைய செய்யும் வகையில்  மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து  அவருக்கு எதிராக வியூகம் வகுத்தார்.
 மாவட்ட செயலாளர் அவர்கள்  மகிந்த ராஜபக்ஷ் அவர்களின் தேர்தல் வெற்றிக்காக தேர்தல் சட்டத்தினை மீறி  தனது தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பதவியை துஸ்பிரயோகம் செய்து தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.
குறிப்பாக மகிந்த ராஜபக்ச அவர்களை வெற்றிபெற வைக்க  2014 ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணத்தை  முழுமையாக மகிந்தவின் தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தினார்.
 குறிப்பாக கருணா  பிள்ளையான் ஹிஸ்புல்லா போன்றவர்களை பயன்படுத்தி தேர்தல் மேடைகளில்  வெள்ள நிவாரணம் பொருட்களை  வழங்கி மகிந்த ராஜபக்ஷ் அவர்களின் தேர்தல் வெற்றிக்கான  பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியிருந்தார்.
குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சமுர்த்தி பணிப்பாளர் அவர்களின் மூலம் ஒவ்வொரு சமுர்த்தி குடும்பத்திற்கும் தலா 2500.00ரூபா வீதம் வழங்கி மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முழுமையாக  மகிந்தவின் தேர்தல் வெற்றிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதாவது  அரச பணத்தினை ஒரு கட்சியின் தேர்தல் வெற்றிக்காக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக இருந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்   பயன்படுத்தினார் என்பதே மிக பெரிய தேர்தல் மோசடி என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமுர்த்தி பணிப்பாளர் திரு.குணரெட்ணம்மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஒரு முறைப்பாடும் உள்ளது .
ஜனாதிபதி தேர்தலிலும் இதே நடவடிக்கை எடுங்கள் என அரச அதிபர் கட்டளைகளை தனது மோசடிக்கு துணை போகும் திரு.நெடுஞ்செழியன் திரு.சுதாகரன்
திரு.ரெங்கநாதன் ஆகிய அதிகாரிகளுக்கு தெரிவித்ததுடன் மகிந்த ராஜபக்ஷ 20 வீத வாக்கு வித்தியாசத்தில் வெல்வதற்கு உபாயங்களை வகுத்திருந்தார்கள்.
 
வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலயங்களின் முடிவுகள் மகிந்த ராஜபக்ஷ அவர்களிற்கு அடிக்கடி தெரிவித்து வந்தார் முடிவில் பாதகமான நிலை. தோன்றியதை பசில் ராஜபக்ஷ் அவருக்கு அறிவித்தார்.
 உடன் செயல்பட்ட பசில் ராஜபக்ஷ் 11 அங்கத்தவரை கொண்ட அணியினை விசேட தேர்தல் கடமை என்று தெரிவித்து மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சாதகமாக முடிவுகளை மாற்றும் செயல்பாட்டில் தீவிரமாக இறங்கியிருந்தனர் .
இதற்கான அனுமதிக் கடிதங்களுக்கு திரு.ரெங்கநாதன் அவர்களை பயன்படுத்தி 11 அங்கத்தவர்களிற்கும்
கண்காணிப்பு உத்தியோகத்தராக நியமனக்கடிதங்களை திரு.ரெங்கநாதன் வழங்கியிருந்தார்.
இக்கடிதங்களை நிராகரித்த உதவி தேர்தல் ஆணையாளர் இது தொடர்பாக கொழும்பு தேர்தல் ஆணையாளரின் கவனத்தில் கொண்டு வந்திருந்த நிலையில்  தேர்தல் ஆணையாளர் எவரையும் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை நீங்கள் கடமையை செய்யுங்கள் நான் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  
ஜனாதிபதி தேர்தலிலும் மகிந்த ராஜபக்ஷ அவர்களிற்கு சாதகமாக மோசடிகளை செய்ய  அரச அதிபர் தனது  வாகனத்தை
(கே.கியூ.8616) தேர்தல் தினத்தில் ஒரு உதவி திட்டமிடல் பணிப்பாளர் பயன்படுத்தி அது தொடர்பான விசாரணையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
 இந்த வாகனத்தின் மூலம் பாரிய நிதி கைமாறுதல்கள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆகமொத்தத்தில் மட்டக்களப்பு  மாவட்ட செயலாளர் அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பதவியை பயன்படுத்தி தொடர்ச்சியாக தேர்தல் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்ற விடயத்தை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியின் அனுமதி இல்லாமல் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முடியாது.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில்  கடந்த காலங்களில் தேர்தல் மோசடிகள் இடபெற்றுள்ளது என எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளதால் அதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களே முழுக்க முழுக்க காரணமானவர். தொடர்ந்தும் இவர் மட்டக்களப்பில் பணியாற்றினால் எதிரும் காலங்களில் நடைபெறும் தேர்தலி்களில் தமிழர் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்பதே யதார்த்தம்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-