News Update :

Monday, July 31, 2017

TamilLetter

பாதுகாக்க வந்துவிட்டது அமரிக்க பாம்பு

பாதுகாக்க வந்துவிட்டது அமரிக்க பாம்பு

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பாம்பு ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
உயிரினங்களை பார்த்து ரோபோக்களை வடிவமைத்த விஞ்ஞானிகள் முதன்முதலாக மனிதனை மொடலாக கொண்டு வடிவமைத்தனர். அதன் பின்னர் சில வகையான மிருகங்களை அடிப்படையாகக் கொண்ட ரோபோக்களை உருவாக்கினர்.
தற்போது பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ வளரக்கூடியதாக இருப்பதுடன் வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் அளவிற்கு மிக தத்ரூபமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
100 கிலோ எடையுடைய இந்த பாம்பு ரோபோ, பேரழிவு மற்றும் அவசர நேரத்தில் அதிகம் பயன்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது விபத்தின் போது ஒருவர் அறையினுள் மாட்டிக்கொண்டால் அவருக்கு சிறு குழாய் வழியாக தண்ணீர் கொடுக்க இந்த பாம்பு ரோபோ பயன்படும் எனவும் கூறப்படுகிறது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-