News Update :

Wednesday, July 19, 2017

TamilLetter

இறுதி மஹிந்தவுடன் மைத்திரியை இணைக்கும் முயற்சி

 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரை இணைய வைப்பதற்கான முயற்சியின் இறுதிப் பேச்சு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் இந்த பேச்சு நடைபெறவுள்ளது.
அமைச்சர் ஜோன் செனவிரத்னவின் இல்லத்தில் நடைபெறள்ள இந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சில அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என கட்சிக்குள் உள்ள ஒரு பிரிவினர் வலியுறுத்திவரும் நிலையில் இந்தக் கூட்டமும் இன்று நடைபெறுகின்றது.
இதேவேளை இதற்கு முன்னர் பல தடவை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் இப்படியான இணக்கப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன.
இருந்த போதிலும் அந்தப் பேச்சுக்களில் எவ்வித வெற்றியும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-