News Update :

Wednesday, July 12, 2017

TamilLetter

பொலித்தீன் பாவனைக்கு தடை


பொலித்தீன் பாவனைக்கு தடை


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் பொலித்தீன் (polythene) பாவனைக்கு தடைவிதிக்கப்படும் என சற்றுமுன்னர் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளது.

அத்தியவசிய செயற்பாடுகள் தொடர்பில் 20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தின் பயன்பாடு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடன் மாத்திரமே மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகம், சமய, கலாச்சாரம் மற்றும் அரசியல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பொலித்தின் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-