News Update :

Monday, July 24, 2017

TamilLetter

மாகாண சபை உறுப்பினர் தவம் அழைப்பு - அமைச்சர் ரவூப் ஹக்கீம் களத்தில்



மாகாண சபை உறுப்பினர் தவம் அழைப்பு - அமைச்சர் ரவூப் ஹக்கீம் களத்தில்



அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வட்டமடு மற்றும் பொத்துவில் பிரதேச விவசாய காணிகளுக்கு நிரந்தர தீர்வை பெரும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான மாவட்ட செயலாளர்,காணிப் பணிப்பாளர்.வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழு இன்று காலை சம்மந்தப்பட்ட இடங்களுக்கு கள விஜயம் மேற் கொண்டு உண்மை நிலையை கண்டறிந்தனர்.

இதன் போது வட்டமடு பிரதேசத்தில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக விவசாயத்தில் ஈடுபட்டதற்கான தடயங்கள்;,ஆவணங்கள் மற்றும் விவசாயிகளின் உறுதிமொழிகள் என்பன சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் கேட்டறியப்பட்டன.

அத்தோடு நியாயங்களை புரிந்து கொண்ட அதிகாரிகள் இது விவசாயக் காணி என்பதை ஏற்றுக் கொண்டு விவசாயம் செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கும் உறுதியளித்தனர்.

வன பரிபாலன திணைக்கள அதிகாரிகளை கொழும்பிலிருந்து அழைத்து வந்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதை ஒழுங்கு செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-