News Update :

Sunday, July 9, 2017

TamilLetter

ஆணுக்கு பிறந்த பெண் குழந்தை! பிரிட்டனில் நடந்த அதிசயம்


லண்டன், ஜூலை.10- பிரிட்டனில் முதன் முறையாக கர்ப்பிணியான ஆணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது.  பிரிட்டனின் குளூசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான  ஹேடன் கிராஸ் என்பவர் என்பருக்கே குழந்தை பிறந்துள்ளது. 
பெண்ணாக பிறந்து பெய்ஜ் காலப்போக்கில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆணாக உணர்ந்து வந்தார்.  அதைத் தொடர்ந்து, பிரிட்டன் அரசின் தேசிய சுகாதார சேவை அமைப்பின் நிதியுதவியுடன், ஆணாக மாறும் சிகிச்சையை மேற்கொண்டார். 
தன் பெயரை, ஹேடன் கிராஸ் என மாற்றிய பெய்ஜ், சட்டப்பூர்வமாகவும், ஆணாக அங்கிகரிக்கப்பட்டார்.
 இந்நிலையில் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஹேடன் விரும்பினார். இதற்காக உயிரணு தானம் பெறுவதற்கான வழிமுறைகளை தேடினார்.
அப்போது தனது ‘முகப் புத்தகம்’ சமூக வலைத்தளத்தில் அறிமுகமான ஒருவரின்  உயிரணுவை தானமாக பெற்றுக்கொண்டு, மருத்துவரின் உதவியுடன் கருவுற்றார்.  இங்கிலாந்தில் ஆண் ஒருவர் கருவுற்ற செய்தி வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தப் பரபரப்பை ஏற்படுத்திய ஹேடன், இப்போது அழகான பெண் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுத்தார். இது மருத்துவ உலகத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என மருத்துவர்கள் கூறினர். 
மேலும் தனது குழந்தைக்கு டிரினிட்டி–லெய் என பெயரிட்டு கொஞ்சி மகிழந்து வரும் ஹேடன், அவள் தன்னுடைய ‘தேவதை’ எனவும் வர்ணித்து உள்ளார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-