News Update :

Saturday, July 8, 2017

TamilLetter

தமிழிசை விரட்டப்பட்டார் : பாதுகாப்பு அமைச்சு அதிரடி

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை, அஞ்சலி செலுத்துவதற்காக முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற போது அதிரடியாக தடுத்த நிறுத்தப்பட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற போதே, இராணுவத்தினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழசை நேற்றிரவு கொழும்புக்கு திரும்பியுள்ளார்.

இராஜதந்திரி ஒருவர் முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றிரவு கொழும்புக்கு திரும்பிய தமிழிசை, அமைச்சர் மனோ கணேசனுடன் சந்திப்பொன்றையும் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக நேற்று வடக்குக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த தமிழிசை, மரியாதையின் நிமித்தம் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத்தில் கொண்டு வந்த மாற்றங்கள் குறித்து தாம் எழுதிய புத்தகத்தை முதலமைச்சருக்கு பரிசாக கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-