News Update :

Saturday, July 22, 2017

TamilLetter

குட்டை பாவாடையால் குட்டையை குழப்பிய அழகி: கொந்தளிப்பில் சவுதி!


சவுதி அரேபியாவில் குலூத் என்ற மாடல் அழகி குட்டை பாவடை அணிந்து வீடியோவை வெளியிட்டதால் சவுதி அதிகாரிகள் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் உஸ்கைஜர் என்ற கிராமத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் குலூத் என்ற மாடல் அழகி குட்டை பாவடையில் நடக்கும் வீடியோ ஒன்றை ஸ்னப்செட்டில் வெளியிட்டார்.
இந்த வீடியோவை பார்த்த சவுதி அதிகாரிகள் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடக செய்திகளில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கான ஆடை கட்டுபாடு கடுமையாக இருக்கும். பெண்கள் தங்கள் முகம் முதல் கால் வரை உடலை மறைக்கும் புர்கா என்ற சொல்லக்கூடிய ஆடையை அணிந்துக் கொண்டுதான் பொதுவெளியில் செல்வார்கள். அரபு நாட்டின் மரபை மீறி அந்த மாடல் அழகி செயல்பட்டுள்ளதாக பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் அந்த மாடல் அழகியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-