News Update :

Thursday, July 13, 2017

TamilLetter

கூட்டமைப்பு செக் - நஸார் ஹஜி மேயர் வேட்பாளர? தடுமாறும் அதாஉல்லா

கூட்டமைப்பு செக் - நஸார் ஹஜி மேயர் வேட்பாளர? தடுமாறும் அதாஉல்லா



பாரீஸ் அகமட்

அதாஉல்லாவுக்கு எம்.பி கிடைக்கும்,அமைச்சு கிடைக்கும் என நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் எத்தனை நாளைக்குத்தான் நம்பிக் கொண்டிருப்பது.அதாஉல்லாவும் நீண்ட நாட்களுக்கு மக்களை கட்டி வைத்திருப்பது முடியாத காரியமாகிப் போய்விடும்,

அந்த வகையில மக்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மக்கள் தமது தேவையை பூர்த்தி செய்வதற்கு அதிகாரத்தை நோக்கி பயணிப்பது யதார்த்தமானதே.

அந்த வகையில் அதாஉல்லா தனது இடுவம்பிலிருந்து விலகி ஹஸனலியின் முஸ்லிம் கூட்டமைப்பின் முதுகில் சவாரி செய்வதற்கு முடிவெடுத்துள்ளார்.

முஸ்லிம் கூட்டமைப்புக்கு சேகு இஸ்ஸதீனும்,அதாஉல்லாவும் ஆலோசனை வழங்க வேண்டுமென்று பஷீர் சேகு தாவூத் அக்கரைப்பற்றில் வைத்து பகிரங்கமாகவே கூறியிருப்பதன் மூலம் அதாஉல்லாவுக்கு கூட்டமைப்பில் எந்தவித பதவியும் வழங்கப்படாது என்பது தெளிவாகின்றது.

இருந்த போதும் கூட்டமைப்போடு இணைந்து போகவே அதாஉல்லா விரும்புகின்றார்.கட்சியில் எந்த பதவியும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை அடுத்த தேர்தலில் தான் பாராளுமன்றம் செல்வதே முக்கியம் என கருதுகிறார்.அத்தோடு மீண்டும் அதிகாரம் தன் கைக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு பெரிய சாமானா? எனும் கேள்வி அவர் உள்மனதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் கூட்டமைப்பில் இணைவதற்கு சிலவற்றை இழக்க வேண்டிய நிலைக்கும் அதாஉல்லா தள்ளப்பட்டுள்ளார்.குறிப்பாக அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் வேட்பாளராக நஸார் ஹஜியை கூட்டமைப்பு சார்பாக போட்டியிட வைக்க வேண்டுமென கோரிக்கை பஸீர் சேகு தாவூதால் முன் வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அக்கரைப்பற்று மாநகர சபையை வெற்றியீட்ட வேண்டுமென்றால் நஸார் ஹஜியின் ஆதரவு மிகவும் அவசியமென நியாயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அதாஉல்லாவும் இணங்கியுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் நஸார் ஹஜியின் வருகை ஏற்கனவே மேயர் கனவில் இருந்த சிலருக்கு தர்ம சங்கடத்தையும்,கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அப்படி நஸார் ஹஜியை கொண்டு வருவாராயின் கடுமையான விளைவுகளை அதாஉல்லா சந்திக்க நேரிடும் என பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஒருத்தர் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-