News Update :

Friday, July 7, 2017

TamilLetter

கொழும்பில் கால் வைக்கிறது சீன வங்கி


கொழும்பில் கால் வைக்கிறது சீன வங்கி

சீனாவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான சீன வங்கி  (Bank of China), கொழும்பில் கிளை ஒன்றை இந்த ஆண்டில் ஆரம்பிக்கவுள்ளது.
இது தெற்காசியாவில் சீன வங்கியின் முதலாவது கிளையாக இருக்கும் என்று அந்த வங்கியின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
கொழும்பில் சீன வங்கியின் கிளையைத் திறப்பது தொடர்பான செயல்முறைகள் குறித்து வங்கி அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
90 மில்லியன் டொலர் முதலீட்டுடன் கொழும்பில் சீன வங்கிக் கிளை ஆரம்பிக்கப்படும் என்று சீனத் தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான சிறிலங்காவின் நிதிப் பரிமாற்றங்களுக்கு இந்த வங்கி உதவியாக அமையும்.
சீன வங்கி, அமெரிக்கா, கனடா, தென்னாபிரிக்கா, கென்யா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-