News Update :

Wednesday, July 12, 2017

TamilLetter

இலங்கையின் கிழக்கு கடலில் சிக்கித் தவித்த யானையை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டது.


இலங்கையின் கிழக்கு கடல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினரால்   கடலில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த யானை ஒன்று காப்பாற்றப்பட்டது.
கொக்கிளாய் பிரதேசத்தில் கொக்குத் தொடுவாயில் கடலைகளால் இந்த யானை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு விட்டது. கடற்படையைச் சேர்ந்த வேகத் தாக்குதல் படகு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த யானை கடலில் சிக்கித் தத்தளிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் யானையைக் காப்பாற்றுவதற்காக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றுமொரு தாக்குதல் படகு மற்றும் கடற்படை குழுவினரை விரைவாக அவ்விடத்திற்கு அனுப்பி வைப்பதற்குக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்ததோடு 2 செட்ரிக் கப்பல்களில் 7 கடற்படை குழுவினர் யானையைக் காப்பாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 
இந்த நடவடிக்கையில் வனவிலங்கு ஆணைய அதிகாரிகளும் இணைந்து, அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப யானையைக் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. பின்னர் பெரிய அளவிலான கயிறைப் பயன்படுத்தி கடலில் சிக்கியிருந்த யானையைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
யானையைப் புல்மேட்டை என்ற வனவிலங்குப் பராமரிப்புப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு வனவிலங்கு பராமரிப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-