News Update :

Monday, July 17, 2017

TamilLetter

பொத்துவில் மண்ணின் சாதனையாளர்கள்



வி.சுகிர்தகுமார்

சர்வதேசரீதியில் சாதனை படைத்து பொத்துவில் மண்ணுக்கு பெருமை சேர்த்த
விளையாட்டு வீரன் பொத்துவில் தங்கமகன் ஏ.எல்.எம். அஸ்ரப் அவர்களையும் சர்வதேச கலைஞர் பொத்துவில் மகன் கவிஞர் யு.எல்.அஸ்மின் அவர்களையும் பாராட்டி கௌரவப்படுத்தும் நிகழ்வும் நோன்பு பெருநாள் விளையாட்டு கலை கலாச்சார விழா– 2017 நிகழ்வுகளும் பொத்துவில் மத்தியகல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

பொத்துவில் பெருநாள் விளையாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கௌரவிப்பு மற்றும் விளையாட்டு கலைகலாச்சார நிகழ்வுகள் நேற்று காலை முதல் ஆரம்பமாகி நள்ளிரவுவரை இடம்பெற்றது.

இந்தவரலாற்று நிகழ்வில் சைக்கிள் ஓட்டம் மரதன் ஓட்டம் கயிறு இழுத்தல் பணிஸ் சாப்பிடுதல் சாக்கோட்டம் கட்டபொல் போத்தல் நீர் நிரப்புதல் மெதுவாகமோட்டார் சைக்கிள் ஓட்டம் பிறைக்கு நச்சத்திரம் இடல் சிறுவர் வினோத உடைபோன்ற பல்சுவை அம்சங்கள் நிறைந்தபோட்டிகளும் இடம்பெற்றன.

அமைப்பின் தலைவர் ஏஜே.தாஜூடீன் ராஜா தலைமையில் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பிரதேச செயலாளர் எம்.எம்.முசாரத், சட்டத்தரணி எஸ்.முனாஸ்டீன் பிரதேசஅரசியல்வாதிகள் கல்விமான்கள் சமூகப்பெரியார்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பெறுமதியான பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் அமைப்பின் தலைவரினால் பிரதேச செயலாளர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அமைப்பின் ஆலோசகர் சட்டத்தரணி எஸ்.முனாஸ்டீன் பொத்துவில் தங்கமகன் அஸ்ரப் அவர்களையும் சர்வதேச கலைஞர் பொத்துவில் மகன் கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவப்படுத்தினார்.

அத்தோடு தமிழ் லெட்டர் செய்திச் சேவை பணிப்பாளர் ஏ.எல்.றமீஸ் நோன்பின் மகத்துவம் பற்றி உரையாற்றிய மாணவனுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வைத்ததுடன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நெறிப்படுத்திய வசூர்கானை பிரதேச மக்கள் பாராட்டினர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-