News Update :

Sunday, July 9, 2017

TamilLetter

ரிஷாட்டின் முக்கிய புள்ளி முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து மாகாண சபையில் போட்டி?




ரிஷாட்டின் முக்கிய புள்ளி முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து மாகாண சபையில் போட்டி?

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி பெரும் எதிர்பார்ப்புடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கட்சியில் இனைந்து கொண்ட அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நபர் தான் ஏமாற்றப்பட்டதாகவும்,அமைச்சரால் தனக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்யாகிப் போனதாகவும் என மனவருத்தத்துடன் தெரிவித்தார்.

எனது நிலையை நன்கு உணர்ந்த எனது தாய்க் கட்சி நண்பர்கள் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு அன்பு கட்டளையிட்டு வருகின்றனர்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும்,அத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவே போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தனது விருப்பத்தை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் வரவேற்றுள்ளதுடன் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிமின் சம்மதத்தை தெரிந்து கொண்ட பிற்பாடே எனது உண்மையான நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன் என்றும் கூறினார்;.

அத்தோடு தான் அறிவிக்கும் வரை எனது பெயரை தற்போதைக்கு வெளியிட வேண்டாமெனவும் எமது ஊடகத்தை கேட்டுக் கொண்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-