News Update :

Sunday, July 23, 2017

TamilLetter

அதாஉல்லாவின் சிறு பிள்ளைத்தனம் - அமைச்சர் ரிஷாட்டை ஒன்றும் செய்யாது



அதாஉல்லாவின் சிறு பிள்ளைத்தனம் - அமைச்சர் ரிஷாட்டை ஒன்றும் செய்யாது


அகமட் நியாஸ் - புத்தளம்
அதாஉல்லாவிற்கு பிறகு தனிக் கட்சி தொடங்கி ஐந்து பாராளுமன்ற உறுப்பினரையும் சில மாகாண சபை உறுப்பினர்களையும் பெற்ற ரிஷாட் பதியுதீனுக்கு புத்தி சொல்லும் அளவிற்கு இன்னும் அதாஉல்லா வளர்ச்சியடையவில்லை.

தனது சொந்த மாவட்டத்திலும் ஏன் அவரின் சொந்த ஊரிலும் வாக்குகளைப் பெறமால் படு தோல்வியடைந்த அதாஉல்லா வன்னிக்கு வந்து வீர வசனம் பேசுகின்றார்.
அத்தோடு பத்து வருடங்கள் ஒரே அமைச்சை பெற்றுள்ளதாகவும் கொள்ளையடித்தாரா? இல்லையா என்று எனக்கு தெரியாது என்றும் கூறுகின்றார்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீண்டும் பாராளுமன்றம் செல்வதென்றால் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் அம்பாரை மாவட்ட வாக்குகள் தேவையாக இருந்த போதும் காழ்புணர்ச்சி காரணமாக அமைச்சர் ரிஷாட்டை விமர்சிப்பது தன்னை பாதிக்கும் என்பதை அதாஉல்லா உணராமல் போய் விட்டார்.

அதாஉல்லாவை நம்புவதற்கு அம்பாரை மாவட்ட மக்கள் ஒரு போதும் தயாரில்லாத நிலையில்; அவரையும் இணைத்துக் கொண்டு முஸ்லிம் கூட்டமைப்பை அமைப்பதற்கு இணங்கியதை அதாஉல்லா மறந்து விட்டார்.

அதாஉல்லாவின் அரசியல் வாழ்க்கையில் நிறைய துரோகத்தனங்களை செய்ததன் விளைவுதான் இன்று வீட்டில் அமர்வதற்கு காரணமென அவர் இன்னும் நம்பவில்லை என்பது கவலையளிக்கின்றது.

மர்ஹூம் அன்வர் இஸ்மாயில்,எச்.எம்.எம்.ஹரீஸ்,பொத்துவில் அஸீஸ்,துல்சான்,அமீர் ரீ.ஏ,ஆரீப் சம்சுதீன் ஆகிய மக்கள் பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்களும் இவரோடு இணைந்த போதும் அத்தனை பேருக்கும் அநியானம் செய்த காரணத்தினால் இவரை விட்டு வெளியேறிய வரலாறு உண்டு.

இப்போது உதவிக்கு வந்த ரிஷாட் பதியுதீனை மோசமாக விமர்சிப்பதன் மூலம் அதாஉல்லாவின் நிலைப்பாடு எப்படிபட்டது என்று மக்கள் புரிந்து கொண்டனர்.

அமைச்சர் ரிஷாட்டின் கட்சியை வளர்ப்பதற்கு அதாஉல்லா தேவையில்லை ஆனால் அதாஉல்லா பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு ரிஷாட் தேவைப்படுவார் என்பதை அதாஉல்லா உணர வேண்டும்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-