News Update :

Wednesday, July 19, 2017

TamilLetter

ஷாகிர் நாயக்கின் கடப்பிதழை ரத்து செய்தது இந்தியா!



மும்பை, ஜூலை.19- சர்ச்சைக்குரிய மதப் போதகர் ஷாகிர் நாயக்கின், அனைத்துலக கடப்பிதழை இந்திய குடிநுழைவுத் துறை ரத்து செய்துள்ளது. 
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்தது மீதான குற்றச்சாட்டின் பேரில் ஷாகிர் நாயக்கிற்கு எதிராக இந்திய தேசிய புலனாய்வுத் துறை விசாரணைக்காக இவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இதுவரை ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வருவதால் இவருடைய கடப்பிதழை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
தேசிய புலனாய்வுத் துறையின் பரிந்துரைக்கு ஏற்ப இவரது கடப்பிதழ் ரத்துச் செய்யப்பட்டதாக மும்பை குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
இவருக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் தேதி நவம்பர் 18-ஆம் தேதியன்று ஷாகிர் நாயக்கிற்கு எதிராக கிரிமினல் வழக்குத் தொடுக்கப்பட்டது.
தற்போது மலேசியாவின் நிரந்தர வசிப்பிட உரிமையைப் பெற்றிருப்பதாக கருதப்படும் ஷாகிர் நாயக், சமய பொறுப்புணர்வுப் போதனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி அளித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி இருக்கிறார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-