News Update :

Monday, July 10, 2017

TamilLetter

கனடாவைச் சூழ்ந்தது காட்டுத் தீ! அவசரநிலை பிரகடனம்.



டோரோண்ட்டோ, ஜுலை.10 - கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்குக் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ உருவாகி கடுமையான வேகத்தில் பரவி வருகிறது.

இம்மாநிலத்தில் சுமார் 183 இடங்களில் பரவியுள்ளது. நேற்று முன்தினம் மட்டுமே 173 இடங்களில் காட்டுத் தீ பரவியதாகத் தகவல் வெளியாகியுள்ளன. காற்று பலமாக வீசுவதால் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தீ வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து இப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த 7 ஆயிரம் பேர் அங்கிருந்து பாதுகாப்பாக்க வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயை அனைக்கும் முயற்சியில் தீயணைக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ணீர் தெளிக்கப்ப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்று அந்நாட்டின் வானிலை இலாகா அறிவித்துள்ளது. இது அப்பகுதி மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது. காட்டுத் தீப் பரவியதையொட்டி 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கொலம்பியா மாநிலத்தில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-