News Update :

Wednesday, July 26, 2017

TamilLetter

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: நாமல் ராஜபக்ச




வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிதுள்ளார்.
கொழும்பில் கூட்டு எதிர்க்கட்சி இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

திறைசேரி பிணை முறிப்பத்திர மோசடி மூலம் நாட்டு மக்களுக்கு ஏற்படும் அநீதியை தடுக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் கூட்டு எதிர்க்கட்சி எடுக்கும்.
அது மாத்திரமல்லாது ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான புதிய உடன்படிக்கை மூலம் துறைமுக அதிகார சபைக்கும் நாட்டிற்கும் துறைமுகம் ஒன்று இல்லாமல் போகும்.
அத்துடன் 99 ஆண்டுகளுக்கு அரசுக்கு ஆயிரத்து 39 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும். இந்த நஷ்டம் குறித்து அரசாங்கத்திற்கு எந்த அக்கறையும் இல்லை.

அரசாங்கத்தின் பலவீனத்தை மறைக்க அரச வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கம் மற்றுமொரு நாட்டை மகிழ்விக்க தேசிய வளங்களை குறைந்த விலையில் விற்பனை செய்கிறதா எனவும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-