News Update :

Friday, July 28, 2017

TamilLetter

உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! பாக். பிரதமர் நவாஸ் பதவிநீக்கம்!


இஸ்லாமாபாத், ஜூலை.28- ஊழல் வழக்கில் பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரீப் குற்றவாளியே என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் அவர் பிரதமர் பதவியிலிருந்து இழக்கிறார். இனி வாழ்நள் முழுவதும் நவாஸ் ஷரீப் பிரதமர் பதவிக்கே வரமுடியாது என தீர்ப்பு சுட்டிக்காட்டியதோடு நிதியமைச்சர் இஷாக் தாரும் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரை உடனடியாக கைது செய்யும்படி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, பாகிஸ்தான் மக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கடந்த 2015 ஆண்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பனாமா ஆவணங்கள் அம்பலமான சம்பவத்தில், பல உலகத் தலைவர்களின் பெயர்களுடன் நவாஸ் ஷரீப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டது. 
இந்நிலையில் அவருடைய குடும்பச் சொத்துகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போது, நாடு கடந்து வரியற்ற பிரதேசங்களில் அமைந்துள்ள சில நிறுவனங்களில் நவாஸ் ஷரீப்பின் பிள்ளைகளுக்கு பங்கு இருப்பது அம்பலமானது. மேலும் அவர் பல சொத்துக்களை லண்டனில் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடந்த ஊழல் வழக்கில் பிரதமர் நவாஸிற்கு எதிராக ஐந்து நீதிபதிகளும் ஏகமனதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். பிரதமர் பதவியில் இருக்கும் தகுதியை அவர் இழந்து விட்டதாக தீர்ப்புக் கூறப்பட்டது.
நாடு கடந்து வரியற்ற தீவு நாடுகளில் உள்ள நிறுவனங்களில் சட்டவிரோதமாக பங்கு வைத்திருந்ததால், அவர் பிரதமர் பதவி வகிக்க  தகுதியில்லாதவர் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. விரைவில் அவர் தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-