News Update :

Thursday, July 13, 2017

TamilLetter

அமெரிக்காவில் திரைமறைவு வாழ்க்கை...அம்பலமான விராட் கோலி




வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஆட்டத்திற்கு பிறகு தற்போது இந்திய அணி ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஓய்வு முடிவதற்குள் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் நியமனத்தை நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது காதலியும் நடிகையுமான அனுஷ்கா ஷார்மாவுடன் அமெரிக்காவில் தங்கியுள்ளார். அவர்கள் இருவரும் ஜோடியாக அமெரிக்காவை சுற்றுப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவுடன் கோலி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான தேர்வில் ஒருபக்கம் பி.சி.சி.ஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இவ்வாறு இருக்க அணியின் கேட்பனாக உள்ள கோலி அமெரிக்காவில் ஜாலி டிரிப்பில் ஈடுபட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-