News Update :

Wednesday, July 12, 2017

TamilLetter

சவூதி அரேபியா கட்டார் விடயத்தில் மீண்டும் பிடிவாதம்

சவூதி அரேபியா கட்டார் விடயத்தில் மீண்டும் பிடிவாதம்



கட்டார் மீது விதிக்கப்பட்ட தடைகள் தொடர்ந்து நீடிக்கும் என சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன.

பயங்கரவாதத்தை சமாளிப்பது தொடர்பில் அமெரிக்காவிற்கும் கட்டாருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் போதுமானதொன்றாக அமையாது எனவும் சவூதி அரேபியா தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்காவிற்கும் கட்டாருக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் சவூதி அரேபியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிக்கப்படும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்டாருக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் தன் மீதான தடைகளை நீக்கி மீண்டும் இணைய வேண்டும் என கட்டார் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கைவிடுத்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-