News Update :

Wednesday, July 5, 2017

TamilLetter

ஹஸனலியை சமூகம் மன்னிக்காது - மாகாண சபை உறுப்பினர் தவம்

ஹஸனலியை சமூகம் மன்னிக்காது - மாகாண சபை உறுப்பினர் தவம்

யாப்பு ரீதியிலான தீர்வில் சிறுபான்மை சமூகங்களுக்கு நியாயம் கிடைக்காவிடின்; அதற்கான பொறுப்பை விக்னேஸ்வரனும் ஹசன் அலியுமே ஏற்க வேண்டி வரும்...........................................
உலகளவில் ஒரு சமூகத்தின் அல்லது தேசத்தின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்காக உழைக்கும் இயக்கங்கள் அல்லது கட்சிகள் பலமாக இருப்பது தனது நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக - அச்சமூகத்தை அல்லது தேசத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அந்நிய சக்திகள் கருத்துமாக இருந்தால் – அவர்கள் இரண்டு தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதை அவதானிக்கலாம்.
1. அவ்வியக்கங்களுக்கு அல்லது கட்சிகளுக்கு எதிராக உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ இயக்கங்களை அல்லது கட்சிகளை உருவாக்கி மோத விடுவது.
அப்படி,
@ பலஸ்தீனில் ஹமாஸையும் பத்தாஹ்வையும் முரண்பட விடப்பட்டுள்ளது.
@ எகிப்தில் சகோரத்துவக் கட்சியையும் இராணுவத்தையும் முரண்பட விடப்பட்டுள்ளது.
@ ஜம்மூ – காஸ்மீர் விடுதலை முன்னணியையும் லஸ்கார் ஈ தைபாவையும் முரண்பட விடப்பட்டுள்ளது.
2. அவ்வியக்கங்களை அல்லது கட்சிகளைத் தடைசெய்யப்பட்ட அல்லது பயங்கரவாத இயக்கங்களாகப் பிரகடனப்படுத்துவது.
அப்படி,
@ ஹமாஸ் பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
@ சகோரத்துவக் கட்சி பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
@ புலிகள் இயக்கம் அவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் இயக்கங்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தற்போது திட்டமிடப்பட்டுப் பலவீனப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக இனப்பிரச்சினைக்கு அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வு வழங்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் உள்ளிருந்து உடைவுகளை சந்தித்திருப்பது மிக ஆபத்தான விடயமாகும்.

இரண்டு சிறுபான்மைச் சமூகங்களையும் ஆதிக்கம் செலுத்த நினைக்கின்ற சக்திகளுக்கு அச்சமூகத்தின் பிரதிநிதிகளே வழி திறந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
உள்ளக முரண்பாடுகளைத் தீர்ப்பதில் கவனக் கலைவு ஏற்படுவதால், அரசியல் யாப்பு ரீதியிலான தீர்வில் சிறுபான்மை சமூகங்களுக்கு நியாயம் கிடைக்காமல் விடுமாயின், அதற்கான முழுப்பொறுப்பையும் தமிழர் தரப்பில் விக்னேஸ்வரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் – முஸ்லிம்கள் தரப்பில் ஹசன் அலியும் பசீர் சேகு தாவூதும் அவர்களோடு ஒத்து ஊதுவோருமே ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.
வரலாறு இவர்களை ஒரு நாளும் மன்னிக்காது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-