News Update :

Thursday, July 13, 2017

TamilLetter

போருக்கு தயாராகும் இந்தியா = சீனா



இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாங் எனும் பகுதியில் அத்துமீறி சாலை அமைத்து வருவதுடன், இந்தியாவுடன் போர் தொடுப்போமென எச்சரிக்கை கொடுத்து வருகிறது சீனா. பதிலுக்கு இந்தியாவும் அந்த பகுதியில் பதுங்கு குழிகளை அமைத்து, ராணுவ வீரர்களை குவித்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு போர் தவிர்க்க முடியாததாகிவிடும் போது, எந்த வித பின்னடைவும் ஏற்படக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

30 நாட்களுக்கு போர் நீடித்தால், அதற்கு தேவையான ஆயுதங்களை வாங்குவதற்கு நிதியை தாராளமாக செலவிடவும், துணை ராணுவத் தலைமைத் தளபதிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சர்வதேச சந்தையில் இருந்து பத்து வகையான அதிநவீன ஆயுதங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

ஆக, போருக்கு தயாராகி வருகிறது இந்தியா, போர் மூண்டால் நிச்சயம் சீனாவுக்கு அதிகப்படியான இழப்பு இருக்குமென தெரிவிக்கின்றனர், இந்திய- சீன மோதலை கவனித்து வரும் உலக நாடுகள்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-