ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை
ராம்
வரவு செலவுத் திட்டம் முடியும் வரை வெளிநாட்டு பயணங்களை குறைத்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
இந்த அறிவித்தலை நேற்று கடிதம் மூலம் கூறியுள்ளார். குறித்த காலப் பகுதியில் அத்தியவசியமான வெளிநாட்டுப் பயணங்கள் இருந்தால், அது மூன்று வாரங்களுக்கு முன்னர் அறிவிக்குமாறும் பிரதமர் கடிதத்தில் கூறியுள்ளார்.
குறித்த கடித்தை , அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வினைதிறனாகவும், முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றும் நோக்கிலும் அனுப்பியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் முடியும் வரை வெளிநாட்டு பயணங்களை குறைத்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். இந்த அறிவித்தலை நேற்று கடிதம் மூலம் கூறியுள்ளார். குறித்த காலப் பகுதியில் அத்தியவசியமான வெளிநாட்டுப் பயணங்கள் இருந்தால், அது மூன்று வாரங்களுக்கு முன்னர் அறிவிக்குமாறும் பிரதமர் கடிதத்தில் கூறியுள்ளார். குறித்த கடித்தை , அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வினைதிறனாகவும், முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றும் நோக்கிலும் அனுப்பியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.