News Update :

Saturday, July 1, 2017

TamilLetter

அதாஉல்லாவின் தலையெழுத்து அமைச்சர் ஹக்கிமின் கையில்

அதாஉல்லாவின் தலையெழுத்து அமைச்சர் ஹக்கிமின் கையில்

சமட் - கொழும்பு செய்தியாளர்
கிழக்கு மாகான ஆளுநர் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு யாரை நியமிப்பது என்ற சிக்கலான யோசனையில் ஜனாதிபதி உள்ளதாக அறிய முடிகிறது.

அந்த வகையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை நியமிக்க வேண்டுமென  யோசனை முன்வைக்கப்பட்ட போதும் கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் கைகளில் உள்ளதால் அதாஉல்லாவை நியமிப்பதன் மூலம் அம் மாகாணத்தில் பல பிரச்சினைகள் தோன்றக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதும் ஆளுனர் நியமனத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  முஸ்லிம் காங்கிரஸிடமே தீர்மானம் எடுக்கும்  விருப்பத்தை வழங்கியுள்ளதாகவும் பேசப்படுகின்றது.

அதாஉல்லா கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்படுவதற்கு அமைச்சர் ஹக்கிமின் விருப்பத்தை ஆளும் தரப்பு அமைச்சர் ஒருவர் கேட்டதாகவும் அதற்கு அமைச்சர் ஹக்கிம் கோபப்பட்டதாகவும் இதனால் அதாஉல்லாவை நியமிப்பதை ஜனாதிபதி விரும்பவில்லை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-