News Update :

Monday, July 17, 2017

TamilLetter

ரஷ்யாவைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!


மாஸ்கோ, ஜூலை.18- ரஷியாவில் உள்ள காம்ஷாட்கா தீபகற்பத்தில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலின் அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.34 மணிக்கு காம்ஷாட்கா தீபகற்பத்தைச் சேர்ந்த பெரிங் தீவின் நகரான நிகோல்ஸ்கோயேவிலிருந்து 200 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்தது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க நிலவியல் ஆய்வகமும் பசிபிக் சுனாமி மையமும் சுனாமி எச்சரிக்கைய அறிவித்தன.
ஏறக்குறைய 10 கிமீ ஆழத்தில் கடல் படுக்கைக்கு கீழே இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்ததால் இதன் தாக்கம் அதிகம் என்றாலும் நிலத்தடியிலிருந்து தூரத்தில் இருந்ததால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் "கடலில் 300 கிமீ சுற்றளவில் மிக வேகமான சுனாமி அலைகள் உண்டாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், நிலைமையைக் கண்டறிந்த பின்னர் சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டதாக மையம் தெரிவித்தது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-