News Update :

Monday, July 10, 2017

TamilLetter

பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தல்: நடிகர் திலீப் கைது! சிறையில் அடைப்பு!





 திருவனந்தபுரம், ஜூலை.11- பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் திலீப்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர்  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட  நடிகர் திலிப்பை 14 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி காரில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பான புகாரில் கார் ஓட்டுனர் மார்ட்டின் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், பாவனாவிடம் கார் ஓட்டுனராக வேலை பார்த்த சுனில்குமார் என்பவர், இச்சம்பவத்துக்கு மூலகாரணமாக செயல்பட்டது தெரிய வந்தது. 
#நடிகர் திலீப் கைது செய்யப்பட்ட போது....
மேலும், இந்த வழக்கில் முக்கிய சந்தேகப் பேர்வழியான சுனில் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர் திலீப் மீதான சந்தேகமும் வலுத்தது. இந்நிலையில், நடிகர் திலீப்பிடம் முதல்கட்ட விசராணை நடத்தப்பட்டது.
இதையடுத்து, நடிகர் திலீப் கேரளப் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.  அவர் சதித்திட்டம் தீட்டியதற்கான பின்னணி தற்போது தெரியவந்துள்ளது. 
# நடிகர் திலீப் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட போது...
நடிகர் திலீப் அவருடைய முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியர், நடிகை பாவனா ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில், காவ்யா மாதவன் மீது திலீப் காதல்வயப் பட்டார். இதை மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவிக்கவே, பாவனா மீது திலீப் ஆத்திரம் அடைந்தார். 
பின்னர், மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த திலீப், காவ்யா மாதவனை 2– ஆவது திருமணம் செய்து கொண்டார். முன்பு, கூட்டாக ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்தபோது வாங்கிய சில நிலங்களைப் பெயர் மாற்றம் செய்ய கையெழுத்து போடுமாறு திலீப் கேட்டபோது, பாவனா மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே, பாவனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. அந்த திருமணத்தைக் கெடுக்கும் நோக்கத்தில், பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்து, அந்த வீடியோவை அவருடைய வருங்கால கணவருக்கு அனுப்பி வைக்க சுனிலுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டப்பட்டது. 
அது அம்பலமானதால், திலீப் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இது, மலையாள மற்றும் தமிழ்த் திரையுலக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-