News Update :

Friday, July 14, 2017

TamilLetter

பிரபாகரனுக்கு தூக்கு; இறுதி மூச்சு வரை சாந்தமாகவே இருந்தார்..!


பிரபாகரனுக்கு தூக்கு; இறுதி மூச்சு வரை சாந்தமாகவே இருந்தார்..!




போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூரில் நேற்று காலை தூக்கிலிடப்பட்ட மலேசிய ஆடவர் எஸ்.பிரபாகரன் தனது இறுதி மூச்சு வரை சாந்தமாக மற்ற கைதிகளுடன் சகஜமாகவே பழகியுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிங்கப்பூருக்குள் ஹெரோயின் வகை போதைப்பொருளை கடத்தி சென்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவர் ஓட்டி வந்த காரில் 22.24 கிராம் போதைப்பொருள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வந்தவரான பிரபாகரன் தான் வேலை செல்லுவதற்காக நண்பனின் காரை இரவல் வாங்கி வந்ததாக கூறியிருந்தார்

பிரபாகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. தான் இந்த விதியை ஏற்று கொள்வதாக கூறிய பிரபாகரன் தனது சாந்த நிலையை இறுதி வரை கடைப்பிடித்தாக கூறப்படுகிறது.

தூக்கு தண்டனை நிறைவேற்ற அழைத்து செல்லும் வரை மற்ற கைதிகளுடன் பிரபாகரன் சிரித்து பேசி நகைச்சுவை செய்ததாக அதிகாரிகள் கூறினர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-