News Update :

Friday, July 14, 2017

TamilLetter

பிரதி அமைச்சர் ஹரீஸ் அமெரிக்கா மற்றும் வகாமஸ் நாடுகளுக்கு பயணம்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் அமெரிக்கா மற்றும் வகாமஸ் நாடுகளுக்கு பயணம்.


(றியாத் ஏ.மஜீத், அகமட் எஸ்.முகைடீன்)

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான குழுவினர் அமெரிக்கா மற்றும் வகாமஸ் நாடுகளுக்கு ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (15) சனிக்கிழமை நள்ளிரவு பயணமானார்கள்.

இவ்விஜயத்தின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ் அமெரிக்காவில் நாட்டின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி மற்றும் விளையாட்டுக்களின் நுட்பங்கள் குறித்து பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடவுள்ளார்.

மேலும் வகாமஸ் நாட்டில் இடம்பெறவுள்ள 6வது பொதுநலவாய இளைஞர் விளையாட்டு விழாவில் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவரின் அழைப்பை ஏற்று பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்படி விளையாட்டு விழாவுக்கு அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-