News Update :

Saturday, July 29, 2017

TamilLetter

அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஹஸனலி சந்திப்பு?



அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஹஸனலி சந்திப்பு?

குல்ஸான் எபி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை முஸ்லிம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.ரீ.ஹஸனலி மிக விரைவில் சந்திக்கவுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவரை இணைத்து முஸ்லிம் கூட்டமைப்பை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன்,முன்னாள் அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா,பஷீர் சேகு தாவூத்,நஜீப் ஏ.மஜீத் ஆகியரோடு ஹஸனலி தரப்பினர் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து முடித்துள்ளனர்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் அதிக ஆதரவைப் பெற்ற முஸ்;லிம் காங்கிரஸ் இக் கூட்டமைப்பில் இணையாவிட்டால் இக கூட்டமைப்பை அமைப்பதில் எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை மறாக அமைச்சர் ரவூப் ஹக்கிமுக்கு எதிரான கூட்டமைப்பாக மாத்திரம் இருந்து விட்டு போவதால் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்ந்துவிடாது என ஹஸனலி தரப்பினர் உணர ஆரம்பித்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டு பயணிப்பதால் மாத்திரமே கிழக்கு மாகாணத்தின்; அதிகாரத்தை முஸ்லிம்; சமூகத்தால் பெறமுடியும் அந்த வகையில் எல்லா அரசியல் தலைவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டமாதிரி அமைச்சர் ரவூப் ஹக்கிமிடமும் ஒருங்கிணைப்பாளர் ஹஸனலி பேச வேண்டுமென ஆலோசனை கூறப்பட்டது.

அமைச்சர் ரவூப் ஹக்கிமுடன் நான் பேச முடியாது என்று முதலில் மறுத்த ஒருங்கிணைப்பாளர் ஹஸனலி பிறகு இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

அமைச்சர் ரவூப் ஹக்கிமுடன் ஹஸனலி தரப்பினர் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு முதலமைச்சர் நஸீர் அகமட் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-