News Update :

Sunday, July 16, 2017

TamilLetter

மற்றுமொரு சர்ச்சை : முதமைச்சர் அதிரடி தீர்மானம்






மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கையின் பிரகாரம் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்

வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரை பதவி நீக்கியதால் தோன்றிய சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீக்காந்தாவினால் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

அதில், “எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையில் தங்கள் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் பா.டெனீஸ்வரன் இழந்து விட்டிருப்பதாக எமது கட்சி தீர்மானித்துள்ளது.

பா.டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவருக்குப் பதிலாக எமது கட்சியினால் பரிந்துரைக்கப்படும் வடக்கு மாகாண சபை உறுப்பினரை அமைச்சராக நியமிக்குமாறு தங்களைக் கோருவதற்கு கட்சி மேலும் தீர்மானித்துள்ளது.
டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

தங்கள் அமைச்சரவைக்கான எமது கட்சியின் பிரதிநிதியின் பெயரை உரிய நேரத்தில் அறியத்தருவோம்” – என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு அன்றைய தினமே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “உங்கள் கடிதம் கிடைத்தது. அதன் உள்ளடக்கங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. ஏற்கனவே அமைச்சர் பா.டெனீஸ்வரன் எமது விசாரணைக்குழு முன் தான் தெரிபடமாட்டார் என்று பகிரங்கமாகக் கூறியதை முன்வைத்தும் வேறு காரணங்களுக்காகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தேன்.

எனவே, உங்கள் பரிந்துரைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவன என்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்” என்றுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-