News Update :

Monday, July 17, 2017

TamilLetter

பிக்பாஸ் காயத்திரிக்கு இலங்கையிலிருந்து மனோ பதிலடி



தென்னிந்தியாவில் மட்டுமல்ல தமிழர்வாழும் நாடுகளிளெல்லாம் சமகாலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். Bigg Boss)

விஜய்தொலைக்காட்சியே நிகழ்ச்சியை ஒளிபரப்பாகின்றது. இதை நடிகர் கமல் ஹாசன்
இதை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதால் பட்டிதொட்டியெங்கும் அது ஹிட்டாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று யார் வெளியே போவது, நாளை யார் போவது என்பது உட்பட பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் அதன் ஓட்டம் அமைந்துள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை அமைச்சர் மனோகணேசனும் பார்த்து இரசிக்கிறார் என அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் தனது முகநூலில் அவர் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடன இயக்குநர் காயத்திரி ரகுராம் வெளியிட்ட கருத்தொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வசனத்தையும் கொழும்பு அரசியலையும் தொடர்புபடுத்தி ஒருவர் இட்டுள்ள பதிவை மனோ பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவு வருமாறு,

சேரி பிகேவியர்’
என்று சொல்வது என்ன ஒரு பிகேவியர்?
அடடா! என்ன ஒரு வார்த்தையாடல்…?

இங்கே இலங்கை கொழும்பு மாநகரில் எனக்கு வாக்களித்து என்னை இந்நாட்டில் மத்திய அமைச்சராக்கிய வாக்காளர்களில் பெரும்பான்மையோர் இந்நகரில் வாழும் சேரி பிகேவியர்காரர்கள் என்று சொல்வதில் எனக்கு பெருமை…

எமது தமிழுறவின் பெருமையின் முன் குத்தாட்ட நடிகை காயத்ரி ரகுமாரமன் தலைகுனிய வேண்டாமா ? என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-