News Update :

Saturday, July 29, 2017

TamilLetter

விமானத்தை வீழ்த்தச் சதி



விமானத்தை வீழ்த்தச் சதி

விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்காக பயங்கரவாதக் கும்பல் ஒன்று போட்டிருந்த திட்டத்தை ஆஸ்திரேலிய போலீசார் முறியடித்துள்ளனர் என்று அந்நாட்டின் பிரதமர் மால்கம் டேர்ன்புல் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நேற்றிரவு ஆஸ்திரேலியா மிகத் தீவிரமான சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் விமானம் ஒன்றை வீழ்த்துவதற்கு சதித் திட்டம் தீட்டியிருந்தனர் என்றும் தக்க தருணத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் இந்தச் சதி முறியடிக்கப்பட்டது என்றும் பிரதமர் டேர்ன்புல் குறிப்பிட்டார்.

மேலும் ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயண விமான நிலையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு விழிப்புநிலையை தாங்கள் அதிகரித்து இருப்பதாகவும் அவர் சொன்னார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-