News Update :

Thursday, July 6, 2017

TamilLetter

அரசாங்கம் உறுதி




எத்தகைய எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க முறையான விதத்தில் புதிய அரசியலமைப்பு (constitution) அமையும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவை இணைப்பேச்சாளர்களான அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களின் பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அளிக்கப்பட்ட பதில்கள் வருமாறு,
“நல்லாட்சி அரசாங்கத்திற்கு 62 இலட்சம் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
அரசாங்கம் அதற்கு ஏற்பவே செயற்படும். இலங்கை மட்டுமன்றி உலக நாடுகளில் அரசியலமைப்புகள் காலத்திற்குக் காலம் மாற்றப்பட்டே வந்துள்ளன.

இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் அவரது அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்காகவே புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தார். அதே போன்றே ஜே.ஆர். ஜெயவர்தனவும், மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது காலத்தில் அவர்களது அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே புதிய அரசியலமைப்பு கொண்டு வந்தனர்.
எனினும் தற்போதைய அரசாங்கத்திற்கு அவ்வாறான தேவை கிடையாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடமுள்ள அதிகாரங்களையும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கின்றார். இதற்கிணங்க இம்முறை புதிய அரசியலமைப்பு மக்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புகின்ற போதும் அது தொடர்பான இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவுமில்லை அது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவும் இல்லை.

6 குழுக்கள் நியமிக்கப்பட்டு அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. கூட்டு எதிரணியினர் இந்தக் குழுக்கள் சிலவற்றின் செயலாளர்களாகவும் தலைவர்களாகவும் இருந்து கொண்டு வெளியில் மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் அங்கு கலந்துரையாடியவற்றை திரிபுபடுத்தி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இது எவ்வகையிலும் தார்மீகமான செயற்பாடும் அல்ல.

புதிய அரசியலமைப்பின் தேவை ஒன்று இப்போது நாட்டிற்கு உள்ளது. நாம் இன்னுமொரு 2500 வருடங்களுக்கு பின்னோக்கிச் செல்ல முடியாது. எவரும் விமர்சிப்பது போல் புதிய அரசியலமைப்பு சடுதியாக கொண்டுவரப்பட மாட்டாது. அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே இது அமையும்” என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-