News Update :

Sunday, July 16, 2017

TamilLetter

அமைச்சர் நஸீர் மாகாண சபை உறுப்பினர் தவம் இணைந்து பதிலடி - எதிரிகள் தினறல்


அமைச்சர் நஸீர் மாகாண சபை உறுப்பினர் தவம் இணைந்து பதிலடி - எதிரிகள் தினறல்



முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திகளால் பரப்பப்பட்ட பொய்ப் பிரச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து மக்களுக்கு தெளிவுபடுத்தினர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீரும் மாகாண சபை உறுப்பினர் தவமும்.

சுகாதார அமைச்சர் நஸீர் மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோருக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவித்து அதில் குளீர்காய்வதற்கு முனைந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வைப் பார்த்து கண்ணீர் விட்டு அழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அட்டாளைச்சேனை நியுஸ்டார் கழகம் ஏற்பாடு செய்த இரவு நேர கிரிக்கட் சுற்றுப் போட்டிக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நிதியுதவி வழங்கி அந் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவத்தை விசேட அதிதியாக அழைக்க வேண்டுமென்று ஏற்பாட்டாளர்களை பணித்தார்.அத்தோடு எனது அமைச்சின் முக்கிய வேலை காரணமாக அக்கரைப்பற்றில் நடந்த இப்தார் நிகழ்வில் நான் கலந்து கொள்ளாததையிட்டு பிழையான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு இந் நிகழ்வு தக்க பதிலடி கொடுக்கும் என அவர் கூறினார்.

அதற்கமைவாக சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வுக்கு சுகாதார அமைச்சர் நஸீர் மாகாண சபை உறுப்பினர் தவம் ஆகியோர் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை கோணவத்தை எட்டாம் பிரிவில் உள்ள சகல மக்களும் இந் நிகழ்வுக்கு வருகை தந்ததுடன் முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கை துரோகிகளுக்கு அம் மக்கள் எடுத்துக் காட்டினர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-