News Update :

Friday, July 28, 2017

TamilLetter

சீனா மீது தாக்குதல்! அமெரிக்க தளபதி



வாஷிங்டன், ஜூலை.28 – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆணையிட்டால் உடனடியாக சீனா மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக அந்நாட்டின் கடற்படைத் தளபதி ஒருவர் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் அமெரிக்க – ஆஸ்திரேலிய கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. இந்தக் கூட்டுப் பயிற்சியை வடகிழக்கு பகுதியில் இருந்து சீனா கண்காணித்து வருவதாக தகவல்கள் பரவின. 
இதனிடையே ஆஸ்திரேலிய தேசிய பல்கழைக்கழகத்தின் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்கக் கடற்படை தளபதி அட்மிரல் ஸ்காட் ஸ்விப்ட் கலந்து கொண்டார். 
அப்போது, அமெரிக அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டால் அடுத்த வாரமே சீனா மீது அணுவாயுதத் தாக்குதலைத் தங்களால் நடத்த முடியும் என்று ஸ்காட் ஸ்விப்ட் கூறினார். 
தென் சீனக் கடல் விவகாரத்தில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், சீனாவின் ஆதரவால்தான் வடகொரியா துணிச்சலாகச் செயல்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கத் தளபதியின் இந்தக் கருத்து சீனாவிலும் அமெரிக்காவிலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-