News Update :

Sunday, July 16, 2017

TamilLetter

கட்டார் நெருக்கடி தீருமா- சவூதி அமைச்சருடன் பிரான்ஸ் அமைச்சர் சந்திப்பு





சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் அடெல் அல்ஜுபீரை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜுன் ஈவ்ஸ் லெ ட்ரியன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கட்டாருக்கும் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் இடையே தொடர்ந்துவரும் நெருக்கடியினை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் சவூதி அரேபியாவிற்கு நேற்றைய தினம் விஜயத்தினை முன்னெடுத்திருந்தார்.

கட்டார் மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே இராஜதந்திர பிளவு மற்றும் வர்த்தகத் தடையை செய்யும் பொருட்டு ஜெட்டாவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.

இதன்போது, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC)க்குள் ஒற்றுமை ஏற்படுத்துவதற்காகவும், வளைகுடா நாடுகளில் நிலவும் நெருக்கடிகளுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்தவும் அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன், பேச்சுவார்த்தைகளுக்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு தாங்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-