News Update :

Saturday, July 15, 2017

TamilLetter

காத்தான்குடியில் கடை முற்றாக எரிந்து நாசம்




காத்தான்குடியில் கடை முற்றாக எரிந்து நாசம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நதியா கடற்கரை வீதியிலுள்ள கடையொன்றிற்கு இனந்தெரியாத நபர்கள் தீவைத்துள்ளமையால் குறித்த கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி தயாரிக்கும் இக்கடை மூடப்பட்டிருந்த நிலையிலேயே தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 2 இலட்சம் ரூபாய் வரையான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கடை உரிமையாளர் காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்த மேலதிக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-