News Update :

Monday, July 10, 2017

TamilLetter

நாடுகடத்தப்படுவாரா மஹிந்த ? : வெளிவந்த அதிர்ச்சி தகவல்



இன்று எமக்கு எதிராக தனிப்பட்ட அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றது. நாம் செய்யாத குற்றங்களில் எம்மை சிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். என்னை கைது செய்யவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாடுகடத்தவும் இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர் என அவர்களின் மூலமாகவே தகவல் கிடைத்துள்ளது. ஆகவே இந்த அரசாங்கதின் உண்மை முகம் இப்போது வெளிப்பட்டுள்ளது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்தில் எவரும் செய்யாத சேவையினை நாம் எமது நாட்டு மக்களுக்காக செய்துள்ளோம். எனினும் இன்று நாமே குற்றவாளியென இந்த அரசாங்கம் கூறி வருகின்றது.
நான் அரச அதிகாரியாக செயற்பட்ட காலத்தில் எந்தவொரு சொத்தையும் கைப்பற்றியுள்ளேனா? எமது பெயரில் எந்தவொரு தேயிலைத் தோட்டமும் இல்லை. ஒரு இறப்பர் தோட்டமும் எனது பெயரில் இல்லை. எந்தவொரு சட்டவிரோத சொத்துக்களும் இல்லை. ஹோட்டல்கள் எவையேனும் எனது பெயரில் உள்ளதா?
எந்தவொரு நிறுவனத்தின் பங்கும் எனது பெயரில் மாற்றப்பட்டுள்ளதா? ஊழல் வாதிகள் என்றால் இவ்வாறு ஏதேனும் இருக்க வேண்டும் அல்லவா?
எமது பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்க வேண்டும். பொது மக்களின் சொத்துக்கள் எம்மிடம் இருக்க வேண்டும். இராணுவ சொத்துக்கள் இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாது நிதிமோசடி குற்றச்சாட்டு என்மீது எவ்வாறு சுமத்தப்பட்டுள்ளது என எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது பெயரில் இவ்வாறு எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லாது என்னை ஏன் குற்றவாளியாக்க பார்க்கின்றனர்.
எனக்கு நியாயமான தீர்வு அவசியமாகின்றது. அதையே நான் எதிர்பார்க்கின்றன்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-