News Update :

Saturday, July 15, 2017

TamilLetter

அழைத்துச் செல்லப்பட்ட வாகனம் விபத்து : லலித் காயமடைந்த நிலையில் நீதிமன்றில் ஆஜர்



புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை விடுவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை, நேற்றிரவு அவசரமாக ஊர்காவற்துறை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது, யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் லலித் ஜயசிங்க உட்பட மூன்று காயமடைந்தனர். எனினும் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை உரிய நேரத்திற்கு முன்னர் ஊர்காவற்துறை பதில் நீதவான் முன்னால் ஆஜர்படுத்த வேண்டியிருந்தமையால், அவர் காயமடைந்த நிலையிலேயே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
எதிர்வரும் 25ஆம் திகதி வரை லலித் ஜயசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் அநுராதபுர சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-