News Update :

Tuesday, July 18, 2017

TamilLetter

அதாஉல்லா யாரை ஏமாற்றுகிறார்.பாவம் அவரின் ஆதரவாளர்கள்- ஏ.எல்.தவத்தின் கவிதை உண்மை கூறுகிறது

அதாஉல்லா யாரை ஏமாற்றுகிறார்.பாவம் அவரின் ஆதரவாளர்கள்- ஏ.எல்.தவத்தின் கவிதை உண்மை கூறுகிறது

வண்டியில் போன ராசா;
வடக்குக்குப் போறாக..............
@@@@@@@@@@@@@@@
கண்டியில் கை வைத்து
கட்சி எல்லாம் கட்டி - இங்கு
வண்டியில் போன ராசா
வடக்குக்குப் போறாக
பொண்ணுக்கு பின்னால
பொறம்போக்கு போற போல
வன்னிக்கு போறாக
வடிவாத்தான் இருக்காக்கும்
என்னத்த சொல்ல
எத நெனச்சி அழ
மண்ணுக்கு நீ என்று
கண்ணுக்குள் வெச்சோமே
பொண்ணுக்குப் பின்னால
போறாரே மகாராசா
பொலன்னறுவையில் பொழந்ததும்
அனுராதபுரத்தில் அள்ளினதும்
கிண்ணியாவில் கிழித்ததும்
மட்டக்களப்பில் மடக்கினதும்
அறியாம போறாயே ராசா
அங்கென்ன நடந்திடும்?
அம்பாரையே - உன்ன
அம்போ என்று விட்ட பின்ன
வன்னிக்குப் போறாயே
வாய்க்கொழுப்புக் காட்டுறாயே
குதிரைக்கு லாடம் கட்டி
குமராக்க நினைக்காயே
குத்துக்கரணமிட்டு
கும்மியாட்டம் ஆடிறாயே
கச்சை நீ இழந்து
கன நாளா ஆச்சி ராசா
இச்சை நீ பட்டு
இனியொன்றும் நடக்கா ராசா
ஆசை என்றா போ
"இஷா"க்குள் வா
அரசியல் வேணாம் ராசா
அசிங்கமா போயிடும்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-