News Update :

Wednesday, July 19, 2017

TamilLetter

அட்டாளைச்சேனை பளீல் பீ.ஏ அதாஉல்லாவிற்கு அச்சுறுத்தலா?



அட்டாளைச்சேனை பளீல் பீ.ஏ அதாஉல்லாவிற்கு அச்சுறுத்தலா?

முகம்மட் முஸாதீக்
சுயநலத்திற்காக அடிக்கடி கொள்கையை மாற்றும் அரசியல் வாதிகளுக்கிடையில் தான் வாழ்ந்த பிரதேசத்திற்காகவும் தனது இனத்திற்காகவும் அவமானங்களை தாண்டி கொள்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பளீல் பீ.ஏ அவர்கள்.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் நாகரிகமற்ற ஆதரவாளர்களால் கேவலம் கெட்ட வார்த்தை பிரயோகங்களால் ஒரு கல்விமானை விமர்சிப்பதன் மூலம் எதிரணியினரின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கு பளீல் பீ.ஏ தடையாக இருக்கிறார் என்பது புலனாகிறது.

ரவூப் ஹக்கீம்தான் நமது சமூகத்தின் தலைவரென அடையாளம் காட்டிய இவர்கள் அந்த தலைமைமீது குற்றம் சுமத்துகின்றனர்.இது எதற்காக என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.

பேரியல் அஷ்ரப் தலைவராக வந்தால் சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் காங்கிரசுக்குள் வந்துவிடுவார் என்பதற்காக ரவூப் ஹக்கீமை தலைவராக தெரிவு செய்வதற்கு முன் நின்றவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா,பின்நாட்களில் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்று கூறிவிட்டு வெளியேறினார்.

ரணீல் தலைவராக இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியோடு எந்த உறவும் முஸ்லிம் காங்கிரஸ் வைக்கக் கூடாது என்று பெருந் தலைவர் அஷ்ரப் கூறினார் என்று இன்று பிரச்சாரம் செய்யும் அதாஉல்லா அன்று தலைவர் மரணித்த மறுகனமே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நெடுஞ்சாலை அமைச்சராக பணிபுரிந்ததை அதாஉல்லா மறந்து விட்டார் போல.

அதாஉல்லாவை கட்சியில் விட்டுத் துரத்தினால் இரண்டாவது ஸ்தானத்தை பெற முடியும் என கங்கணம்கட்டி அதில் வெற்றி பெற்றது ஹஸனலியும் பஷீர் சேகு தாவூத்தும் இதையும் மறந்து விட்டு அவர்களோடு கூட்டணி வைத்துள்ளார் அதாஉல்லா.

அதாஉல்லாவுக்கு மூன்று வருடம்,ரிஷாட்டுக்கு ஐந்து வருடம்,ஹஸனலிக்கு 17வருடம் தேவைப்பட்டிருக்கின்றது ரவூப் ஹக்கீமை புரிந்து கொள்வதற்கு. முன்னவர்களுக்கு அமைச்சுக்கள் பின்னவர்களுக்கு தேசியப்பட்டியல் இதுதான் இவர்களின் கொள்கை

சந்திரிகா மற்றும் மஹிந்த அரசாங்கங்கள் முஸ்லிம் காங்கிரஸை சிதைப்பதற்காகவே முஸ்லிம் முகவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தது இந்த இரண்டு அரசாங்கங்களின் பெரும் அச்சுறுத்தலை தாண்டி இப் பேரியக்கத்தை பாதுகாப்பதற்கே போராட்டங்களை வருடக் கணக்கில் சந்தித்தவர் தலைவர் ரவூப் ஹக்கீம்.

கட்சியும் கட்சிப் போராளிகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த இப்படியான காலகட்டங்களில் சமூக துNiராகிகளால் பணங்களையும் பதவிகளையும் காட்டி விலை பேசிய போதும் தனது கொள்கையை விட்டுக் கொடுக்காமல் முஸ்லிம் காங்கிரசுக்காக வழக்குகளை சந்தித்தவர் பளீல் பீ.ஏ

கட்சியின் தலைமைக்கு கட்டுப்படுவதை கொள்கையாக வைத்திருக்கும் பளீல் பீ.ஏ எதிரிகளின் பார்வையில் என்னவாகவும் இருந்து போகட்டும் ஆனால் நமது சமூகத்தின் வரலாறுகளில் பளீல் பீ.ஏ நேர்மையான அத்தியாயமாக எழுதப்படும்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-