News Update :

Friday, July 21, 2017

TamilLetter

இருவேறு நிலைப்பாட்டில் மஹிந்த அணி


அரசியலமைப்பு பேரவையில் இருந்து வெளியேறுவது தொடர்பில் மஹிந்த அணியின் (Mahinda Rajapaksa Team) மத்தியில் இருவேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றன.

தேசிய சுதந்திர முன்னணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த தினம் அரசியலமைப்பு பேரவையில் இருந்து வெளியேறினர்.
அரசியல் யாப்பு தயாரிப்பு வழிநடத்தல் குழுவில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக, ஹகிந்த அணியினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அதில் அங்கம் வகிக்கும் பிரசன்ன ரணதுங்க மற்றும் தினேஸ் குணவர்தன ஆகியோர் அதில் இருந்து இன்னும் விலகவில்லை.
வழிநடத்தல் குழுவில் இருந்து விலகுவது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்று ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தவாரம் நடைபெறவுள்ள யாப்பு வழிநடத்தல் கூட்டத்திலும் தாங்கள் பங்கேற்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அணியின் சிலர் அரசியலமைப்பு பேரவையில் இணைந்திருந்து, போராட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனவே அரசியலமைப்பு பேரவையில் இருந்து வெளியேறுவது தொடர்பில் மஹிந்த அணியின் மத்தியில் இருவேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றன

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-