ஆளும் கட்சியில் இருக்கும் எட்டு அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஐ.தே.கட்சிக்கும் ஸ்ரீ ல.சு.கட்சிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை முடிவுறுகின்றது.
இந்நிலையில், தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த உடன்படிக்கை முடிவடைந்த பின்னர் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் 18 பேர் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளவுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவி்க்கின்றன.
எனினும் நேற்று நடந்த சந்திப்பின் போது யார் யார் கலந்து கொண்டனர்? இச் சந்திப்பின் போது என்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது குறித்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.