News Update :

Saturday, July 15, 2017

TamilLetter

ரஜினியிடம் 4 மணிநேர ஆலோசனை நடத்திய வைகோ..





தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினியால் தான் நிரப்பமுடியும் என பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றார். தமிழக அரசியலில் நேரடியாக நடிகர் ரஜினி தலையிட்ட காலம் கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது தான்.

அந்த தேர்தலில் திமுக-தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டணி உருவாக காரணமாக நடிகர் ரஜினிகாந்த் இருந்தார். திமுகவுக்கு சார்பாக நடிகர் ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியபோது தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டு இருந்தது.

இதற்கிடை அந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

நான்கு மணிநேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு எந்த முடிவும் வெளியாகவில்லை. அப்போது திமுகவுக்கு எதிராக களம் அமைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் வைகோ கூட்டணி அமைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக வரும் செய்திகள் குறித்து மதிமுக பொதுச்செயலாலர் வைகோ தனது கருத்தை தெரிவிக்காமல் இருக்கிறார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-